தமிழகம் காஷ்மீராக மாறிவருகிறது! திருமுருகன் காந்தி வேதனை
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் ’உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாட்டை’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட.து
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
இதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய திருமுருகன் காந்தி, ’அரசியலுக்கு வருவீர்களா என்று என்னிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நாங்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை.
அரசியலை நிர்ணயம் செய்வோம். பண்பாட்டில் விடுதலை அடையும்போதுதான் பொருளாதாரத்தில் விடுதலை அடைகிறோம். அதற்குப் பின்தான் நாம் அரசியலில் விடுதலை அடைய முடியும். நாம் தற்சார்பு வாழ்க்கையை வாழ வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி நாம் வாழக்கூடாது. நமக்கான தேவையை நாமே பூர்த்திசெய்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு பொருளையும் நாம் உருவாக்க வேண்டும். மாணவர்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்த பாதையில் எதாவது ஒரு பொருளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாம் தன்னிறைவு அடையமுடியும்.
நான் சிறையில் இருந்ததற்கும், தற்போது வெளியே இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒரே மாதிரியான சுதந்திரமற்ற முறையில்தான் தற்போதைய சூழ்நிலை உள்ளது. தமிழகம் தற்போது காஷ்மீரைப் போலத்தான் மாறிவருகிறது. இந்த கூட்டத்தைக் கூட உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிதான் நடத்திவருகிறோம். இதற்காக 2 மாதங்களாக மே17 இயக்க தோழர்கள் முயன்றுள்ளனர். போஸ்டர் ஒட்டக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி யில் பிற மாநிலத்தைச் சார்ந்த நபர்கள் அனுமதிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தமிழர்களின் உரிமையைப் பறிக்கக்கூடியே திட்டமாகப் பார்க்கிறோம்’ என்றார்.