சாதிரீதியான மோசமான கருத்துகளைப் பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும் குற்றமே! உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாதிரீதியான மோசமான கருத்துகளை பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும், அது குற்றமே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த  பெண் ஒருவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்படவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.