இந்தியாவின் சேலை அணிந்த பெண் பாகுபலி?

வெளிநாடுகளின் நிர்பந்தங்களுக்கு தலை வணங்காமல், எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்தியாவின் இறையாண்மையையும், செயலாற்றலையும் உலகுக்கு உணர்த்திய வீர மங்கை அன்னை இந்திரா காந்தி.

வெளிநாடுகளின் நிர்பந்தங்களுக்கு தலை வணங்காமல், எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்தியாவின் இறையாண்மையையும், செயலாற்றலையும் உலகுக்கு உணர்த்திய வீர மங்கை அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று அவரது தன்னிகரற்ற துணிச்சல், எடுத்த முடிவில் திடமாய் நின்ற நெஞ்சுறுதி போன்ற அருங்குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோமா?

156568651Untitled-1பிரபல பத்திரிகையாளரும், கட்டுரையாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என ஊடகத்துறையில் தனி முத்திரை பதித்துவரும் சகாரிகா கோஷ் என்ற பெண்மணி, வாஷிங்டன் நகரில் அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி விருந்துண்ட நிகழ்ச்சியை முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சனுடன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிகழ்வுடன் ஒப்பிட்டு ’இந்தியாவின் சக்திவாய்ந்த பிரதமர் இந்திரா காந்தி’ என்னும் தனது நூலில் சில சம்பவங்களை பதிவு செய்துள்ளார்.

இன்றைய ஜனநாயகம் என்பது பாகுபலி கலாசாரத்துடன் ஒப்பிடப்படுகிறது. 56 அங்குலம் மார்பளவு, நிமிர்ந்த நடை, முழக்கமிடும் பேச்சு ஆகியவை வாக்காளர்களை வெகுவாக கவர்கின்றது.

அவ்வகையில், போர் குதிரையில் அமர்ந்தவாறு, எந்நேரமும் போருக்கு ஆயத்தமாக இருக்கும் மன உறுதியுடன்  நாட்டின் எல்லைகளை தீவிரமாக கண்காணித்த ஒரு வீராங்கனையாக – இந்தியாவின் அச்சு அசலான சேலை அணிந்த பாகுபலியாக இந்திரா காந்தி திகழ்ந்தார்.

இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தல் நேர்ந்தாலும், தேசபகுதியின் உந்துதலுடன் முன்னணி போர் வீராங்கனையாக அவர் விரைந்தார்.

1971-ம் ஆண்டு குறுகிய காலப் போரின் மூலம் கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் விடுதலை பெற்று தந்தது. வங்காளதேசம் என்ற புதிய நாடு உதயமானது.

வங்காளதேசம் உருவான பின்னர், இந்தியாவை கேலியாக பார்த்த அமெரிக்காவை ஒரு பெண் சிங்கத்தின் துணிச்சலுடன் எதிர்த்து வென்ற சக்தியின் மறு அவதாரமாக இந்திரா காந்தியை பார்க்க ஆரம்பித்தார்.

தனது முடிவின்படி பாகிஸ்தானை தனிமைப்படுத்தி, இந்த போரின் வெற்றியை உலகுக்கு பறைசாற்றிய இந்தியாவின் ஒரே பிரதமர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் முதன்முறையாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் பிரதமராக ஷேக் முஜிபுர் ரஹ்மான் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேற்கு பாகிஸ்தானின் பிரதான கட்சி தலைவராக இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் துல் புகார் அலி பூட்டோ மற்றும் பாகிஸ்தானின் அந்நாள் ராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கிய யஹ்யா கான் ஆகியோர் அவாமி லீக் கட்சியின் வெற்றியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அவாமி லீக கட்சிக்கு பாராளுமன்றத்தில் உரிய மதிப்பு அளிக்கப்படாததை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தனர்.

அவர்களது போராட்டத்தை ஆயுத பலத்தால் அடக்குமாறு தனது படைகளுக்கு ராணுவ தளபதி யஹ்யா கான் உத்தரவிட்டார்.

ஈவிரக்கமற்ற வகையில் ராணுவம் போட்ட வெறியாட்டத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொள்ளை, கற்பழிப்பு, பொது சொத்துகளை தீயிட்டு எரித்தல் போன்ற அரச வன்முறை கோரத் தாண்டவம் ஆடியது.

இந்த அடக்குமுறையில் சுமார் 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 4 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.

குழந்தைகளின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் விளா எலும்புகள் முறிக்கப்பட்டது. பெண்களின் மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டது.

உயிர் பயத்தில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடி அகதிகளாக வர தொடங்கினர். குறுகிய காலத்துக்குள் இந்தியாவில் தஞ்சம் அடைந்த அகதிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது.

முன்னர், பாகிஸ்தானின் பிரச்சனையாக இருந்தது, தற்போது இந்தியாவின் பிரச்சனையாக மாறி விட்டதாக அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்தார்.

1971-ம் ஆண்டு மே மாதவாக்கில் கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் இந்தியாவில் தங்கியிருந்த முகாம்களை இந்திரா பார்வையிட்டார். அங்கிருந்த மக்களின் பீதியடைந்த முகங்கள், அதிர்ச்சிக்குள்ளான மனநிலை, மற்றும் ராணுவ தாக்குதல்களில் தங்களது உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரக் கதைகளை கேட்ட அவர் பேச முடியாத நிலைக்கு ஆளானார்.

பாகிஸ்தானின் இந்த ஊழித்தாண்டவத்தை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. இங்கு நடப்பது என்ன? என்பதையும், பாகிஸ்தானின் திவிரவாதத்தையும் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக, உலக நாடுகளின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும் என இந்திரா காந்தி தீர்மானித்தார்.

201711191612364583_2_indira 3._L_styvpf  இரும்பு மங்கை இந்திரா காந்தி - இந்தியாவின் சேலை அணிந்த பெண் பாகுபலி? 201711191612364583 2 indira 3

ஆனால், அமெரிக்க அரசு இவ்விகாரத்தில் மவுனமாக இருந்ததுடன், பாகிஸ்தானில் நடந்துவந்த இன அழிப்புக்கு எதிராக குரல் எழுப்ப முயன்ற சில அமெரிக்க அதிகாரிகளையும் அமைதிப்படுத்தி வைத்திருந்த அதே வேளையில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும் அனுப்பி கொண்டிருந்தது.

அப்போது, இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸெஞ்சர், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டால், பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரிக்காது என்று இந்தியா கருதி விடக்கூடாது என பகிரங்கமாக தெரிவித்தார்.

பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர வேண்டுமானால் இந்தியாவுக்கு சில நட்பு நாடுகளின் ஆதரவு தேவை என கருதிய இந்திரா காந்தி, ஏற்கனவே இந்தியா – சோவியத் யூனியன் (ரஷியா) இடையிலான அமைதி, நட்புறவு ஒப்பந்தம்போல் சில நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திகொள்ள விரும்பினார்.

மேலும், உலகில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே கருத்து ஒற்றுமையை உண்டாக்கும் நோக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இந்திரா காந்தி 21 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி.க்கு இந்திரா பேட்டியளித்தார். கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தில் நீங்கள் சற்று அடக்கி வாசித்தால் என்ன? என்னும் பாணியில் அவரிடம் செய்தியாளர் கேட்டபோது, ’ஹிட்லர் இன அழிப்பில் ஈடுபட்டபோது, நாம் அமைதியாக இருப்போம், ஜெர்மனியுடன் உறவு பாராட்டினால் போதும். யூத மக்கள் செத்து ஒழியட்டும் என நீங்கள் (பிரிட்டன்) ஏன் கூறவில்லை? என கண்களில் தீப்பொறி பறக்க எதிர்கேள்வி கேட்டு திகைப்பில் ஆழ்த்தினார்.

அந்த பெண்ணால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என பாகிஸ்தானின் ஆட்சியாளர் யஹ்யா கான் கொக்கரித்தபோது, அந்தக் கருத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவரது மனநிலையை காட்டுகிறது என பதிலடியும் தந்தார்.

பாகிஸ்தானை பணியவைக்கும் கடைசி முயற்சியாக அமெரிக்காவின் மூலம் யாஹ்யா கானுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் வாஷிங்டன் சென்றார். அங்கு இந்திராவுக்கும் அமெரிக்க அதிபர் நிக்சனுக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்தே கருத்து முரண்பாடுகள் இருப்பது கண்கூடாக தெரிந்தது.

201711191612364583_3_indira 1._L_styvpf  இரும்பு மங்கை இந்திரா காந்தி - இந்தியாவின் சேலை அணிந்த பெண் பாகுபலி? 201711191612364583 3 indira 1

இந்தியர்களை எதிர்ப்பாளர்கள் என்றும், மூர்க்கத்தனமானவர்கள் என்றும் கருதிவந்த ரிச்சர்ட் நிக்சன், இந்தியாவை வயதான பெண்நாய் என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தின்போது இந்திராவுக்கு அமெரிக்க அதிபர் மாளிகை விருந்து அளித்தது. நிக்சனுக்கு அடுத்த நாற்காலியில் அம்ர்ந்திருந்த இந்திரா காந்தி ஆரம்பத்தில் இருந்து விருந்து நிகழ்ச்சி முடியும்வரை கண்களை மூடியவாறு மவுனமாக அமர்ந்திருந்த காட்சி நிக்சனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

அவரது இந்த செய்கை இந்தியாவின் ஆளுமையையும், நெஞ்சுறுதியையும் பறை சாற்றியதாக இந்த விருந்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற இந்திய உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டனில் இருந்து திரும்பிய பிறகு, அமெரிக்கா நமக்காக எதுவும் செய்யப் போவதில்லை. நாம் நமது சொந்தக் காலில்தான் நிற்க வேண்டும் என்று இந்திரா தீர்மானித்தார்.

3-12-1971 அன்று கொல்கத்தா நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திரா காந்தி உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள விமானப் படை தளங்களின்மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசிய தகவல் இந்திராவிடம் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நம்மை தாக்கியதற்காக கடவுளுக்கு நன்றி என்று கூறிய இந்திரா காந்தி,  பாகிஸ்தான் மீது படை எடுக்குமாறு இந்திய படைகளுக்கு உத்தரவிட்டார். ராணுவ தளபதிகள் மானேக்‌ஷா, அவுரோரா தலைமையிலான படைகள் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தன.

இதை அறிந்த அமெரிக்க அதிபர் நிக்சன் ஆத்திரம் அடைந்தார். இந்தியாவின் ஆவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவை மிரட்டுவதற்காகவும் அணு ஆயுதங்களை தாங்கிய கப்பலையும் US Seventh Fleet என்ற பிரமாண்டமான போர் கப்பலையும் இந்தியாவை நோக்கி அனுப்ப உத்தரவிட்டார். அவை வங்காள விரிகுடாவை நெருங்கி கொண்டிருந்தன.

இதை கண்டு சிலிர்த்து எழுந்த இந்திரா காந்தி, டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் வீர முழக்கமிட்டார்.

அமெரிக்க போர் கப்பல்கள் இந்தியாவுக்கு விரையும் நிலையில் அந்த பொதுக் கூட்டத்துக்கு இந்திய போர் விமானங்கள் வானில் வட்டமிட்டவாறு பாதுகாப்பு அளித்தன.

பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் முடிவில் இருந்து ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்று அந்த கூட்டத்தில் இந்திரா என்ற பெண் சிங்கம் கர்ஜித்தது.

அமெரிக்காவின் போர் கப்பல்கள் வங்காள விரிகுடாவுக்குள் நுழைவதற்கு முன்னர் 14 நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா விடுவித்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் மண்டியிட்டு சரண் அடைந்தது.

இரும்பு மங்கை இந்திரா காந்தி - இந்தியாவின் சேலை அணிந்த பெண் பாகுபலி? 201711191612364583 4 pakistani army surrender to bangladesh 16 dec 1971 1

அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் நிக்சன், பாதுகாப்பு ஆலோசகர் கிஸெஞ்சர் ஆகியோருக்கு எதிராக தவறானதொரு சிறு அசைவை எடுத்திருந்தாலும், அது இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் போராக முடிந்திருக்கும் என்ற சூழ்நிலையை மிக சூட்சமமாக கையாண்டார், அன்னை இந்திரா காந்தி.

இந்தப் போரின் வெற்றியையும், கிழக்கு பாகிஸ்தான் விடுதலையையும், மேற்கு பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணாகதி அடைந்ததையும்
அதே நாளில் பாராளுமன்றத்தில் இந்திரா காந்தி அறிவித்தபோது, உறுப்பினர்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் எழுந்து நின்று கரவொலியின் மூலம் அந்த இரும்புப் பெண்மணியை பாராட்டினர்.

நாட்டில் உள்ள அனைவரும் இந்த வெற்றியை பெரு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னாள் பிரதமரும், அந்நாள் ஜனசங் பரிவார் இயக்கத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் இந்திரா காந்தியை ‘இளம் துர்கா தேவி’ என்று போற்றினார்.

201711191612364583_5_rendezvous-with-indira-gandhi_12114fa6-62eb-11e7-b1de-0034c3d6ea80._L_styvpf  இரும்பு மங்கை இந்திரா காந்தி - இந்தியாவின் சேலை அணிந்த பெண் பாகுபலி? 201711191612364583 5 rendezvous with indira gandhi 12114fa6 62eb 11e7 b1de 0034c3d6ea80

அந்த அழகிய இரும்பு மங்கை ஒரு பாறையைப் போன்ற உறுதியுடன் நின்று, இந்திய படைகளின் வீரத்தையும், ஆற்றலையும் உலகுக்கு உணர்த்தி, அமெரிக்காவின் மூக்கை உடைத்ததுடன், பாகிஸ்தானையும் மண்டியிட வைத்தார்.

அவ்வகையில், இந்தியா என்றால் வீரம், இந்தியா என்றால் இந்திரா. இந்திரா என்றால் வீரம் என்பதை தனது வாழ்நாளில் மெய்ப்பித்த அன்னை இந்திராவை இந்தியாவின் சேலை அணிந்த பெண் பாகுபலி என்று சொன்னால் அது மிகையாகாது.