பப்புவா நியூகினியில் மூடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரீசிலிப்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன.
அவுஸ்திரேலியாவினால் மனூஸ் தீவுகளில் செயற்படுத்தப்பட்டுவந்த முகாமில் உள்ள 150 பேரை தாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாக நியூசிலாந்து அறிவித்திருந்தது.
எனினும் இதற்கு அவுஸ்திரேலியா மறுப்பு தெரிவித்துவந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிப்பது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமரின் அறிவிப்பை அடுத்து, புகலிடக் கோரிக்கையாளர்களை நியூசிலாந்துக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா இணங்கியுள்ளதாக வதந்திகள் வெளியாகியுள்ளன.
பப்புவா நியூகினியில் செயற்படுத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்துவைக்கும் முகாம் சட்டவிரோதமானது என அந்த நாட்டு உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் குறித்த முகாமில் இருந்த 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததுடன், வேறு முகாமிற்கு மாற்றப்படின் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அச்சம் வெளியிட்டிருந்தனர்.