வருகிற 2018 ஆம் ஆண்டு முதல் பூமியில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக புவியிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜியோலாஜிக்கல் சொசைட்டி ஆப் அமெரிக்கா என்ற ஆய்வு அமைப்பை சேர்ந்த புவியிலாளர்கள் நடத்திய ஆய்வின்முடியில் இந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சராசரியாக 7 ரிக்டெர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பூமி பாதிக்கப்பட்டுள்ளதாவும், இதனால் பூமியின் மையப்பகுதியில் உள்ள சக்தி வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் மைய பகுதிகளில் உள்ள சக்தி வெளியேறுவதால், அதன் தாக்கம் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பூமியில் மிகப்பெரிய அளவிளாக நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அதனை உலக நாடுகள் பெரிதாக எடுத்துகொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் வானியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிஸ் வெளியிட்ட கருத்து பூமியின் ஆயுட்காலம் வெறும் 600 ஆண்டுகள் தான் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.