நயன்தாராவுக்கும் – புலிகள் இயக்க தலைவருக்கும் என்ன தொடர்பு?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாக வெற்றி நடைபோடும் திரைப்படம் அறம்.

நேர்மையான மாவட்ட ஆட்சியாளராக இவர் நடித்திருந்த இப்படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார்.

1509561030இப்படத்தில் நயன்தாராவின் பெயர் மதிவதனி என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை இயக்குனர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தமீழழ தலைவர் பிரபாகரன் மனைவியின் பெயர் தான் இந்த மதிவதனி. அவரின் போராட்டத்தின் பின்னணியில் ஆதரவாக இருந்தவர் என்பதால் இந்த பெயரை வைத்தாராம்.

அதே போல் அந்த குழந்தையை காப்பாற்றும் சிறுவனின் பெயர் முத்து என்று இருக்கும். இதற்கு காரணம் ஈழத்துக்கு ஆதரவாக தீக்குளித்து இறந்த தோழர் முத்துக்குமாரின் நினைவாகத்தான் அந்த பெயர் வைத்தாராம்.