பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜுலி செம்ம பேமஸாகிவிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூட நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றார்.
அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் கலா மாஸ்டர் ரசிகர்களுக்காக சிறப்பு நடனம் ஒன்றை ஆடினார், உடனே ஜுலியும் இணைந்து அவருடன் ஆட ஆரம்பித்தார்.
நடனமாடிய ஒரு சில நொடிகளிலேயே ஆடியன்ஸ் கிண்டல் செய்ய ஆரம்பிக்க, பேசாமல் ஒதுங்கி நின்றுவிட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஏன் தேவையில்லாமல் ஆடவேண்டும், பிறகு இப்படி அசிங்கப்பட்டு ஒதுங்க வேண்டும் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.