மாபெரும் ரெய்டு இதற்காகதான் நடந்துள்ளது,..?

திமுக செயல் தலைவர்மு.க.ஸ்டாலின் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நெல்லைமாவட்டத்துக்கு வந்துள்ளார்

சங்கரன்கோவிலில் முன்னாள் எம்.பி.தங்க வேலு இல்ல கல்யாண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:

சுய மரியாதை திரு மணங்களை நடத்துவதில் திமுக முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 1967-ஆம் ஆண்டுக்கு முன்பு சுயமரியாதை திருமணங்கள் நடத்த முடியாது.

பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனதும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என ஆணை பிறப்பித்தார்.

ஐதீக முறைப்படி நடைபெறும் திருமணங்களில் புரோகிதர்கள் கூறுவது மண மக்களுக்கும், அதில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கும் புரியாது. அதிமுக ஆட்சியை பொதுமக்கள் திட்டுவதை விட திமுகவைதான் அதிகமாக திட்டுகிறார்கள்.

ஏன் என்றால்..? அதிமுக ஆட்சியை இன்னும் ஏன் அகற்றாமல் இருக்கிறீர்கள் என கேட்கின்றனர். தமிழகத்தில் இதுவரை நடந்த வருமான வரி ரெய்டில் யார் மீதும்நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இது ஏன் என்று புரியவில்லை. ஜெயலலிதா வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்தியதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

அதிமுகவை மிரட்டி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. தமிழக மக்கள் துணையுடன் பாஜகவால் தமிழகத்தில் கால் அல்ல கையைக் கூட ஊன்ற முடியாது.

தமிழக மக்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது. அதிமுக ஆட்சியை மிரட்டி தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு பாஜக செயல்படுகிறது.

தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாக தமிழக அரசு உள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.