அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் என்ற போர்வையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வளங்களை சுரண்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசம் கடலரிப்பினால் பாரிய அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றது.
இந்த நிலையில் இல்மனைற் என்ற போர்வையில் தமது பிரதேசத்தின் வளங்களை சுரண்டுவதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.