பிரபல நடிகை எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் விக்ரமுடன் நடித்த ஐ படத்தின் மூலம் நிறைய ரசிகர்களை சம்பாரித்தார். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக பெரிய பட்ஜெட் படமான 2.0 படத்தில் கதாநாயகியா நடித்துள்ளார்.
இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும், சில நாட்களுக்கு சினிமாவில் இருந்து விடைப்பெற்று இவர் ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்து அதை சிறிது நாட்கள் முன்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக சூப்பர் கேர்ள் என்ற சீரியலில் நடித்தார், அந்த சீரியல் இன்று இரவு தான் முதல் எபிசோட் ஒளிப்பரப்பப்படவுள்ளனர். இதை தன் டுவிட்டரில் அறிவித்து இந்த இரவு எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று எமி தெரிவித்துள்ளார்.