சசிகலா..இளவரசியிடம் விரைவில் விசாரணை – ஐ.டியின் அடுத்த அதிரடி.!

சசிகலா..இளவரசியிடம் விரைவில் விசாரணை - ஐ.டியின் அடுத்த அதிரடி.!அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் நண்பா்கள் மற்றும் உறவினா்களின் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வாித்துறையினா் கடந்த 9 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு சோதனை நடத்தினா். தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பினை கிளப்பிய இந்த வருமான வரி சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளது வருமான வரித்துறை.

வாி ஏய்ப்பு தொடா்பாக பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்த பின்னரே சசிகலா குடும்பத்தினாின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், சோதனையில் 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் சிறையிலுள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படுமெனவும் ஐ.டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.