எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே நடிகை ஐஸ்வர்யா ராய் தான் உலகி அழகி.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 6வது பிறந்தநாள் அண்மையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாருக்கான், ஷில்பா ஷெட்டி என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவரும் Smile Train Foundationல் உள்ள குழந்தைகளை பார்க்க சென்றுள்ளனர். ஐஸ்வர்யா ராய் வருவதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அங்கு செல்ல மிகவும் மோசமான சூழுல் நிலவியிருக்கிறது.
அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரிக்கையாளர்களால் கொஞ்சம் கஷ்டப்பட்டுள்ளனர். இதனை பார்த்த ஐஸ்வர்யா பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம், குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று எவ்வளவோ கூறியுள்ளார். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை.
அந்த நிமிடத்தில் இருந்த சூழலை பார்த்த ஐஸ்வர்யா அனைவர் முன்னிலையிலும் கண் கலங்கியுள்ளார்.