சன்ஜை பன்சல் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இதில் படத்தில் இந்து பாரம்பரியம் மிக்க மகாராணியை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ராஜஸ்தான், உத்தரபிரதேஷ் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பத்மாவதி படக்குழுவுக்கு ஆதரவு பெருகியது. மேலும் பத்மாவதி படத்தை திரையிடுவது தொடர்பான விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகர் நானா படேகர் “ஒரு படம் சிறப்பாக இருந்தால் வெற்றி பெறும். இல்லையெனில், தோல்வி அடையும், எனவே ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.