தொடருந்து விபத்துக்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில், அதிகரித்துள்ளதாக, தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து விபத்துக்களைக் குறைப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில் குறுக்கு வீதிகளுக்கு அருகில் மக்களுக்கு தௌிவூட்டும் பதாகைகளை காட்சிப் படுத்தும் வேலைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ள தொடருந்துத் திணைக்களமானது, இந்த வருடத்தின் இதுவரையான பத்து மாத காலப் பகுதியில் இடம்பெற்றுள்ள விபத்துச் சம்பவங்கள் பற்றிய விபரங்களையும் பட்டியலிட்டுள்ளது.
அந்தவகையில்,
- தொடருந்து விபத்துக்களால், 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்
- தொடருந்து குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் தொடருந்து மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதோடு, தொடருந்திலிருந்து பயணிகள் விழுந்துள்ள சம்பவங்கள் 76 பதிவாகியுள்ளன.
- தொடருந்து வீதிகள் அல்லது தொடருந்து வீதிக்கு குறுக்காக பயணித்தமையால் ஏற்பட்ட விபத்துக்கள் 436 இடம்பெற்றுள்ளன.
- வாகனங்கள் தொடருந்து குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமையால் ஏற்பட்ட பாதிப்பு சம்பவங்கள் 506 பதிவாகியுள்ளன.
- கடந்த 10 மாதங்களில் செல்பி எடுக்கும் முயற்சிகளால், தொடருந்து விபத்துக்களில் சிக்கி, 24 இளைஞர்களின் பலியாகியுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.