ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன? காட்டிக்கொடுத்த பூங்குன்றனின் பென்டிரைவ்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் செப்டம்பர் 22ஆம் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 75 நாட்கள் அப்போல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா உயிர் இழந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் உள்ளது என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

போயஸ் கார்டனில் செப்டம்பர் 22 தேதி அன்று என்ன நடந்தது..? அப்போது, வீட்டில் இருந்த பாதுகாவலர்கள் எங்கே சென்றனர்?.

வீட்டில் ஜெயலலிதாவிற்கு என பிரத்யேகமாக இருந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது? அப்பல்லோவில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது ஏன்..? என பல ஆயிரக்கணக்கான கேள்விகள் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அதனோடு, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆரம்பத்தில் எதையும் ஒத்துக்கொள்ளாத பூங்குன்றன், பின்னர் படிப்படியாக சில தகவல்களை சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சிகரமானதாக இருந்ததாம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் ஜெயலலிதா வீட்டில் நிகழ்ந்த சம்பவங்கள், அவரை ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகள் அடங்கிய பென்டிரைவ் தன்னிடம் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.

பூங்குன்றனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கடந்த 17ஆம் தேதியன்று வேதாநிலையம் வீட்டில் உள்ள பூங்குன்றன் அறையில் சோதனை நடைபெற்றுள்ளது. அந்த சோதனையில் சில பென்டிரைவ்கள், லேப்டாப், கம்யூட்டரில் இருந்த ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றியுள்ளனர்.

பூங்குன்றன் அறையில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் இருந்த சிசிடிவி பதிவில்., இரவு 9 மணியில் இருந்து பதிவான காட்சிகள், பரபரப்பான காட்சிகளாக உள்ளன.

இரவு 10.06 மணிக்கு ஆம்புலன்ஸ் நுழைவதும், அதன்பின்னர் மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்சில் ஏற்றப்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.