அமெரிக்க இராணுவ விமானம் மூலம் வொஷிங்டன் வான் பரப்பில் ஆண் குறி வடிவில் பறந்து, கோலம் போட்ட சம்பவம் தற்போது கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
வொஷிங்டன் பாதுகாப்புத் தரப்பிற்குச் சொந்தமான இலக்ரோனிக் வானூர்தி மூலம் இந்த செயல் புரியப்பட்டுள்ளது.
இதுவொரு அருவருக்கத் தக்க செயல் என வான்படையினர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிராந்திய வான்படைத் தலைமையகத்தினால் இந்த செயல் புரியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மத்திய வொஷிங்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ள இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைத்தளத்தில் பாரிய கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் முதன்முதலில் டுவிட்டர் வெளியிடப்பட்டது. பின்னர் வீடியோவாகவும் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னர் வெவ்வேறான வான்படைத் தளபதிகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இந்தச் செயலை எந்தவகையிலும் ஊக்கப்படுத்த முடியாது எனவும், இது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழுத்தங்கள் எழுந்துள்ளன.
இதற்காக உரிய வான்படை அதிகாரிகள் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
E/A-18 Growler ரக வானூர்த்தியின் மூலம் இந்த செயல் புரியப்பட்டுள்ளது. இந்த ரக வானூர்த்தியில் விமானியுடன் மேலும் ஒருவரே பயணிக்க முடியும்.
எனவே இந்த இருவர் குறித்து விரிவான விசாரணைகளை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் கார்டியன் இணையத்தளத்தில் இதற்கான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.