பச்சிளம் குழந்தைகளை காக்க போராடும் நர்ஸ்கள்!

நிலநடுக்கத்தின்போது பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறையில் இருந்த நர்ஸ்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

குறித்த வீடியோவில் செவிலியர்கள் ஒவ்வொருவரும் அந்த குழந்தைகளை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் மனித நேயத்தின் உச்சமாக அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தில் மருத்துவமனை வளாகமே அதிரும்போது பொதுவாக அனைவரும் வெளியே குதித்து தப்பிக்கவே முயற்சிப்பார்கள்.

ஆனால் இந்த சிறப்பு வார்டில் உள்ள செவிலியர்கள் குழந்தைகளை அதிர்வில் இருந்து பத்திரமாக பாதுகாத்து வெளியே எடுத்துச் செல்கின்றனர்.

குறித்த வீடியோவை பார்த்த நபர் ஒருவர், சிறிதளவு கூட நேரத்தை வீணாக்காமல் தங்கள் உயிரையே பாதுகாப்பது போல் அந்த குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பது சிலிர்க்க வைக்கின்றது என்றார்.

இது அவர்களது பணியாக இருந்தாலும் கூட உயிரை துச்சமாக நினைத்து அந்த பச்சிளம் குழந்தைகளை மீட்கும் அவர்களது செயல் பாராட்டுக்குறியது என்றார் இன்னொருவர்.

குறித்த வீடியோ எங்கு பதிவானது என்ற தகவல் வெளியாகவில்லை என்ற போதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.