தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் இது குறித்து தாய் உதவியுடன் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோர் நகரில் பத்தாவது படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோர் மற்றும் இளைய சகோதரனுடன் வசித்து வருகிறார்.
சிறுமியிடம் அவர் தந்தை சில காலமாக தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரை தவறாக தொட்ட தந்தை அதிகளவில் வரம்பு மீறியுள்ளார்.
இனியும் பொறுத்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூற, பயந்து போன தந்தை வீட்டை விட்டு வெளியில் தப்பியோடியுள்ளார்.
பின்னர் தாயும், மகளும் சேர்ந்து இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். பெண் அதிகாரி அனுராதா ஷர்மா கூறுகையில், முதலில் கடும் பயத்துடன் இருந்த சிறுமி சம்பவம் குறித்து பேச திணறினாள்.
தந்தை தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பிறகு கூற அவரை கைது செய்துள்ளோம்.
சிறுமியின் தந்தை குடிக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது, தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.