முகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆரவார கொண்டாட்டம்

அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்

அந்நாட்டு நாடாளுமன்றத் அவைத்தலைவரால் வாசிக்கப்பட்ட முகாபேயின் பதவி விலகல் கடிதத்தில், அதிகார மாற்றம் சுலபமாக நடைபெற வேண்டும் எனும் நோக்கில், தாமாக முன்வந்து பதவி விலகி முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான் உலக நாடுகளின் தலைவர்களிலேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார்.

அவரது பதவி விலகல் அறிவிப்பால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்த செய்தியைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவையிலே எழுந்து நடனமாடத் தொடங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்

அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் முன்பே அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களுக்குத் தயாராகினர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்

தகவல் வெளியானதும் தெருக்களில் கூடியிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு ஆடிப் பாடியும், வாகனங்களின் மீதும் ஏரி நடனமாடியும் கொண்டாட்த் தொடங்கினர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்
முகாபே பதவி விலக வற்புறுத்திய ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்

2015-இல் ஒரு பொது நிகழ்வில் மேடையில் இருந்து முகாபே கீழே விழும் படம், அவர் ஜிம்பாப்வே எல்லையில் இருந்து தப்பி குதிப்பது போல மாற்றப்பட்டு பரவலாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது.

முகாபே கீழே விழும் படம்

nm3

நீங்கள் முன்னதாகவே தொடங்கி தாமதமாக முடித்துள்ளீர்கள் என்று கூறி அவரது இளம் வயதில் எடுகப்பட்ட படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

nm2

முகாபேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படும் என்று ஹாலிவுட் நடிகர் டான் சீடல் படத்தை வைத்து பகடிக்காக உருவாக்கப்பட்டுள்ள போஸ்டரை அந்த நடிகர் பகிர்ந்துள்ளார்.