கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் என் ஆளோட செருப்பக் காணோம். தமிழ் – கயல் ஆனந்தி, யோகி பாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.

என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் பாடல்களைக் கேட்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தன் ஒன்ராகா இசை நிறுவனத்தின் சார்பாக அதை வெளியிட்டார். ஒன்ராகா யூடியூப் சேனலில் “இரவில் வருகிற திருடன் போலவே” பாடல் செம ட்ரெண்ட் அடித்தது.

கயல் ஆனந்தியில் கால்களைச் சுற்றித்தான் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை, காதல் எல்லாம் நகர்கிறது. படத்தின் முதல் போஸ்டராக இஷானுக்கு டைரக்டர் ஜெகன் காட்டியது அழகான செருப்புகள் அணிந்த கயல் ஆனந்தியின் கால்களைத் தான்.  ஆகையால் கதாநாயகியின் முகம் தெரியாமல் கால்களை ரசித்துத் தான் பாடல்களுக்கு மெட்டமைத்ததாக இஷான் தேவ் கூறியிருக்கிறார்.

விஜய ஸாகர் வரிகளில் படம் வெளியாகும் முன்னமே பாடல்கள் ஹிட்டடித்து. படம் வெளியான பின்னரும் பாடல்களுக்காக பாராட்டுகள் வருவதாக இஷான் கூறினார்.

இஷான் அடுத்ததாக சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.