”மலிவு விலையில் டிக்கெட் வாங்கினால் விமானத்தில் கடைசியாகத்தான் ஏற வேண்டும்”: பிரிட்டீஷ் ஏர்வேஸ்

''குறைந்த விலையில் டிக்கெட் வாங்கினால் விமானத்தில் கடைசியாகதான் ஏற வேண்டும்''

மலிவு விலையில் பயணச்சீட்டை பதிவு செய்யும் பயணிகள் விமானத்தில் கடைசியாகத்தான் ஏறவேண்டும் என்ற ஓர் அறிவிப்பை விமான நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ளது.

இதற்காக, ஐந்து வகையான முன்னுரிமை அளிக்கும் அனுமதி சீட்டு முறை கொண்டுவரப்பட உள்ளது.

இம்முறையை சிலர் மேல்தட்டு வர்க்கத்தின் மேலாதிக்கம் என வாதிடுகின்றனர்.

ஆனால், பயணிகள் விமானத்திற்குள் செல்லும் பணியை எளிதாக்கவே இம்முறை என்றும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஐபீரியா போன்ற பிற நிறுவனங்களுடன் சமநிலையில் இயங்கவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பிரிட்டீஷ் ஏர்வேஸ்நிறுவனம் கூறியுள்ளது.

''குறைந்த விலையில் டிக்கெட் வாங்கினால் விமானத்தில் கடைசியாகதான் ஏற வேண்டும்''

பயணிகளை விமானத்திற்குள் விரைவாக ஏற்றுவது நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கு முக்கியமானதாகும்.

விமானத்திற்குள் சென்றுவிட்டாலும் பணம்தான் பேசும் என்பது சரிதான்போல.