ஐ எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்ட ஐ எஸ் இயக்க ஆதரவாளர்கள் மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தலச்சேரி நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சிரியா நாட்டுக்குச் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் மீண்டும் கண்ணூர் திரும்பியதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கண்காணிக்கும்படி கேரள போலீசுக்கு மத்திய உளவுத்துறை உத்தரவிட்டது.

isis-tro_3

அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணூர் டிஎஸ்பி சதானந்தம் தலைமையிலான போலீஸார், மிதிலாஜ், ரஷித், ஹம்ஸா உள்ளிட்ட 5 பேரை கண்ணூரில் வைத்து கைது செய்தனர். அதன்பின் விசாரணைக்கு பின் ஐந்து பேரும் தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.