மெகா நகரமாக மாறப் போகும் இலங்கை!! கட்டார் உறுதிமொழி!!

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் கட்டார் அரசாங்க அதிகாரிகள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் விரும்பும் ஓர் இடத்தில் இந்த நகரத்தை அமைக்க முடியும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டார் அரசாங்கத்தினால் முதல் முறையாக இலங்கைக்கே இவ்வாறான ஓர் நகரம் வழங்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.நகரத்தை அமைப்பதற்கு இடமொன்றை ஒதுக்கித் தருமாறு கட்டார் அதிகாரிகள் கோரியுள்ளனர்.