யாழ். ஆறுகால் மடம் பகுதியில், ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும், மற்றுமொரு நபருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலா 10,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்தார்.
இதேவேளை, இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மருமகன் மீது குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் தனது மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
தனது மகளை மருமகன் துன்புறுத்தி, சித்திரவதை செய்வதாலேயே மருமகனை கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.