நடிகை ரஞ்சிதாவுடன், நித்தியானந்தா ஒன்றாக இருக்கும் கானொளிக் காட்சி உண்மையானது என்று கானொளியை ஆய்வு செய்த டில்லி தடய அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
போலி சாமியார் நித்தியானந்தா, நடிகையுடன் நெருக்கமாக இருந்த கானொளி, கடந்த 2010 இல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆனால் வீடியோவில் இருப்பது தான் இல்லை. அது பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது என்று நித்தியானந்தா மறுத்து வந்தார்.
அதைத்தொடர்ந்து அந்தக் கானொளி டில்லி, தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் நித்தியானந்தா கானொளி சித்தரிக்கப்பட்டது அல்ல. கானொளியில் பொய்யாக எதுவும் செய்யப்பட வில்லை.
நித்தியானந்தா தான் அந்தக் காட்சியில் உள்ளார் என்று டில்லி தடய அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கானொளியை வெளியிட்ட லெனின் கருப்பன் கூறியதாவது:- ”நித்தியானந்தா வீடியோ சித்தரிக்கப்பட்டது அல்ல என்பது நிரூபணமானமாகி உள்ளது.
மேலும் நித்தியானந்தாவின் உண்மை முகம் வீடியோ மூலம் அம்பலமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி நித்தியானந்தா வீடியோ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நித்தியானந்தா ஆச்சிரம நிர்வாகிகள் தம் மீது 19 வழக்குகள் போட்டுள்ளனர் ”என்று லெனின் கருப்பன் கூறியுள்ளார்.