சில காலங்களுக்கு முன்னர் சரத் குமார் ஒரு மாஸ் நடிகர். தற்போதும் கூட கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
அவருடைய காலத்தில் தனதுக்கு போட்டியாக விஜய்காந்துடன் நடிப்பில் போர் செய்து வந்தார்.
சூர்யவம்சம், நாட்டாமை, அய்யா, சிம்மராசி, நட்புக்காக, சமுத்திரம், மூவேந்தர், மாயி போன்ற பல படங்களில் இவரது சிறந்த படங்கள் என சொல்லலாம்.
கல்லூரி காலத்தில் நான் என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெண்ணை சைட் அடிப்போம், அந்த பெண்ணை வீடு வரை சென்று விட்டுவிட்டு வருவோம்.
என நகைச்சுவையாக ரசித்துக் கூறினார் சரத் குமார். மேலும், சிறு வயதில் பல சேட்டைகள் செய்து விளையாடிதாகவும், நண்பர்களுடன் சேர்ந்து நிறைய வம்புகளில் மாட்டியுள்ளதாகவும் சிரித்துக் கொண்டே ரசித்துப் பேசினார் சரத் குமார்.
அதே போல் இதுவரை நடித்த படங்களின் நடித்த காட்சிகள் பிடிக்காத காட்சிகள் உள்ளதா எனக் கேட்ட போது, அவர் கூறியதாவது. ஆம், 2004ல் நமிதாவுடன் நடித்து வெளிவந்த படத்தில் அது போன்ற கட்சிகள் உள்ளது.
அந்த படத்தில் வரும் அர்ஜுனா அர்ஜுனா பாடலில், நமிதாவின் தொப்புளில் நீர் உறிஞ்சி எடுப்பது போல் ஒரு காட்சி வரும்.
அந்த காட்சியைப் டீவியில் பார்க்கும் போது என் மகன் அது எப்படி பா அங்க இருந்து தண்ணி எடுக்கிறீங்க எனக் கேட்கிறார்.
இதனாலேயே அந்த காட்சி பிடிக்காமல் போய்விட்டது. அது வந்தாலேயே தற்போது டீவி சேனலை மாற்றி விடுவேன் என கலகலப்பாக கூறினார் சரத் குமார்.