தேசியக் கொடி ஏற்ற மறுத்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சர்வேஸ்வரன்!

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் மறுப்புத் தெரிவித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது, மௌனம் காத்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களது கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும் என்று வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கு ஆரம்ப காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கையே காரணம் எனவும், இதில் எவ்வித இனவாதமும் இல்லை என்றும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உறுப்பினரான வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், அண்மையில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசியக் கொடி ஏற்ற மறுத்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் சர்வேஸ்வரன்!