முள்ளந்தண்டு வலி உள்ளவர்களுக்கான ‘டோர்ன் முறை’ தெரபி FREE GERMAN DORN TREATMENT இலவச சிகிச்சை முகாமுக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான டோர்ன் DORN வைத்தியமுறைச் செயற்பாட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜைலானி ரஷ்வி தெரிவித்தார்.
கொழும்பில் 3 இடங்களில் இந்த இலவச சிகிச்சை முகாம் இம்மாதம் 30ஆம் திகதியும், டிசெம்பெர் 02ஆம், மற்றும் 03ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் வியாழக்கிழமை (30.11.2017) கொழும்பு 13, புதிய செட்டியார் தெரு, இலக்கம் 102 இலுள்ள பட்டக்கண்ணு நிலையத்தில் காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை டோர்ன் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
இதேவேளை 2வது சிகிச்சை முகாம் டிசெம்பெர் 02ஆம் திகதி காலை 11 மணி முதற்கொண்டு மாலை 4.30 மணிவரை கொழும்பு 13, புதிய செட்டியார் தெரு ஸ்ரீராம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
3 ஆவது சிகிச்சை முகாம் டிசெம்பெர் 03ஆம் திகதி பம்பலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் காலை 11 மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
முற்பதிவுகளுக்கு 011-2423168, 011- 2431759, 011-2323818 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
ஜேர்மனியைச் சேர்ந்த ‘டோர்ன்’ வைத்திய நிபுணர் குழுவினர் மற்றும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட உள்நாட்டு வைத்திய சிகிச்சைக் குழுவினர் இந்த சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சிகிச்சையளிக்கவுள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியர் ஜைலான் தெரிவிக்கையில்…
முள்ளந்தண்டில் உள்ள தொடர் என்புகளில் ஏற்படும் சிறிய விலகலின் காரணமாக முதுகு, மூட்டு, கழுத்து, தலை, இடுப்பு, முழங்கால் மற்றும் இடுப்பு நரம்பு சார்ந்த அவயவங்களில் வலிகள் ஏற்படுகின்றன.
டோர்ன் சிகிச்சை எந்தவித பக்க விளைவுகளுமின்றி மேற்கொள்ளப்படும் எளிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த முள்ளந்தண்டு நிவாரண சிகிச்சையாகும்.
முதுகுவலி கழுத்து வலி, தோள்பட்டை மற்றும் இடுப்பு வலி தெரபி முறையிலான வலிநீக்கும் மருத்துவமே டோர்ன் சிகிச்சையாகும்.
ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ரெயின்கில்ட் ,சன்ஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் 2010 முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இலவசமாக சுமார் 2000 பேருக்கு மேல் இச்சிகிச்சையை வழங்கியுள்ளதோடு அவர்கள் சுகமடைந்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.