-
மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். குடும்பத்தில் உள்ள வர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படா தீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
கடகம்
கடகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் இன்று முடியும். மனைவி வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடை யும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப் படும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
-
கன்னி
கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
-
துலாம்
துலாம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக் குறை நீடிக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புது அனுபவம் கிட்டும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர் கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
-
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக் குள் கருத்து மோதல்கள் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
-
மீனம்
மீனம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.