சிறுமி துஷ்பிரயோகம்; வயோதிபக் குற்றவாளிக்கு கடூழியச் சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்; வயோதிபக் குற்றவாளிக்கு கடூழியச் சிறைத்தண்டனை!

யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஒராண்டு கடூழிய சிறைத் தண்டனையும் 10ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் 65 வயதான வயோதிபர் ஒருவர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்குத் தொடர்பான விசாரனைகளில், குறித்த குற்றச்சாட்டை வயோதிபர் ஏற்கொண்டதிற்கு இணங்க அவ்வயோதிபருக்கு ஒராண்டு கடூழிய சிறைத் தண்டனையும், 10ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

உரிய தண்டப்பணத்தை செலுத்தத் தவறின், 1 மாத கால கடூழிய சிறையும், 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் விதிக்கப்பட்டதோடு, அதுவும் செலுத்தத்தவறினால் ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டுமென யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.