பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.
கோவில் ஒன்றில் நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….
உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு குழுவினர் நீண்ட நேரமாக நின்றுள்ளனர்.
அப்பகுதி மக்கள் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டு குறித்த இடத்தின் முகவரியை குறிப்பிட்டு அங்கு ஒரு குழுவினர் இருப்பதாகவும் அவர்கள் மது அருந்திக்கொண்டு இருப்பதாகவும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த கோப்பாய் பொலிஸார் அவர்களை விசாரிக்க முற்பட்ட போது அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துதுள்ளனர்.
சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதுடன் பின்னர் அந்த இடத்தை விட்டு அனைவரும் விலகி சென்றனர்.