நீர்கொழும்பு மீனவரின் வலையில் வீழ்ந்த அதிஷ்டம்!!

நீர்கொழும்பு மங்குளி கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட அரியவகை மீனுக்கு பல கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளது.மிகவும் அரிய மீன் வகைகளில் ஒன்றான ப்ளு பின் டூனா எனப்படும் மீன் ஒன்று நேற்று முன்தினம் இலங்கை மீனவர்களுக்கு கிடைத்திருந்தது.

டூனா மீனை கரைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடலில் காண முடியாத இந்த மீன் அண்மையில் அதிஷ்டவசமாக சிக்கியுள்ளது.

நியூசிலாந்து போன்ற கடல் பிரதேசங்களிலேயே இந்த மீனை அவதானிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த மீனை கரைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் முடிவில், இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.