குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி: வவுனியாவில் சம்பம்!

 

வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

5a18023963e77-IBCTAMIL

இந்த சம்பவம் வவுனியாவில் இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து  தெரியவருவதாவது..

இன்று(24) பிற்பகல் 2 மணியளவில் மாமடு குளத்திற்கு குளிப்பதற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 4 பேர் சென்றிருந்தனர்.

குளத்தில் கரை ஓரப்பகுதியிலிருந்து தண்ணீரைத்தட்டித் தட்டி ஒருவர் மீது ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தபோது இதில் ஜெயப்பிரதாப் (வயது -26)  மற்றும் 16 வயதுடைய பானுரேகா ஆகிய இருவரும் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மற்றைய இருவரும் வெளியில் சென்று அயலவர்களின் உதவியை நாடியதுடன் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடி மீட்ட நிலையில் அருகிலுள்ள மாமடுவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

எனினும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழந்த இருவரின் சடலங்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இறந்தவர்களில் ஒருவர் திருமணமாகி இரண்டு மாதமும் மற்றையவர் 2018ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரணப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.