பத்மாவதி படத்தை காரணமாக வைத்து ஒருவர் தூக்கிட்ட சம்பவம்.!

பத்மாவதி படத்தை காரணமாக வைத்து ஒருவர் தூக்கிட்ட சம்பவம்.!

பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தான் பத்மாவதி. இந்த படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த படத்தில் எதோ ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்ததால் இந்த படத்தை வெளியிட பெரும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள். அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்தியது. அப்போது தீபிகாவுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தீபிகா, பன்சாலியின் கொடும்பாவிகளை எரித்தனர்.

பத்மாவதி படத்தை காரணமாக வைத்து ஒருவர் தூக்கிட்ட சம்பவம்.!

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். பத்மாவதி படத்திற்கு தடை விதிக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் அடையாள தெரியாத நபர் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அவரது உயிரை மாய்த்துள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே பத்மாவதி படத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பத்மாவதி படத்தை எதிர்க்கிறோம், நாங்கள் உருவ பொம்மையெல்லாம் எரிக்க மாட்டோடு, கொலை செய்துவிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீசிற்கு பெரும் எதிர்பு ஏற்பட்டுள்ளது.