பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய படம் தான் பத்மாவதி. இந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, சித்துார் கோட்டை ராணி, பத்மினியாக, பத்மாவதி படத்தில் நடித்துள்ளார், தீபிகா. இதில், ராணி பத்மினியை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
துவக்கத்தில், இதை பொருட்படுத்தாமல் இருந்த தீபிகா, இப்போது, மிகவும் பயந்துவிட்டாராம். தீபிகாவின் மூக்கை வெட்டுவோம், தலைக்கு 10 கோடி ரூபாய் தருவோம், தீபிகாவை உயிருடன் எரித்தால், ஒரு கோடி ரூபாய் தருவோம், என்று அவருக்கு ஏதிராக பல மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனக்கு எதிராக, பகிரங்கமாக, தினமும் மிரட்டல் விடுக்கப்படுவதை பார்த்து, உண்மையிலேயே மிரண்டு போயிருக்கிறார் நடிகை தீபிகா.