பாலிவுட் படமான ஜூலி 2 திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் கதை ஒரு பிரபல நடிகையின் கதை என்று கூறப்பட்டுவருகிறது. இந்த கதையின் கதாநாயகி ராய் லட்சுமி, இவர் படத்தில் சினிமா வாய்ப்பிற்காக ஒரு நடிகை சந்திக்கும் பிரச்சனைகளை கூறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த ராய் லட்சுமி கூறியதாவது: “இது ஒரு நடிகையின் கதைதான். ஆனால் சிக்ஸ் ஸ்மிதாவின் கதையல்ல. இப்போதும் நம்முடன் இருக்கும் ஒரு நடிகையின் கதை” என்று கூறியவர் ஒரு சின்ன க்ளுவும் கொடுத்தார். “அந்த நடிகையின் தங்கை தமிழ்நாட்டு மருமகள்” என்று கூறினார்.
அப்படியானால் அது நக்மா தான் என்று சினிமா பார்வையாளர்கள் முடிவு செய்தார்கள். இதற்காக நக்மாவை தொடர்பு கொண்டு கேட்டால், அவர் கூறியதாவது:நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்கு அப்படி எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஒரு படத்தை பார்க்காமலேயே கருத்து சொல்ல முடியாது. என் கதையை படமாக்க யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. அதனால் அது என் கதையாக இருக்க வாய்ப்பில்லை. படம் வெளிவந்ததும் படத்தை பார்ப்பேன். அது என் கதையாக இருந்தால் அதற்கு சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன், என்றார்.