ஓட்டுநர்கள் இல்லாத பேருந்துகள் சிங்கப்பூரில் அறிமுகம் !

ஓட்டுநர்கள் இல்லாத பயணிகள் போக்குவரத்து  பேருந்துகளை சிங்கப்பூர் அரசாங்கமானது, 2022ஆம் ஆண்டளவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஓட்டுநர்கள் இல்லாத பேருந்துகள் சிங்கப்பூரில் அறிமுகம் !

குறைந்தளவு தூரங்களை நோக்கி பயணிப்போரின் நலன் கருதி, இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை குறைந்த  வீதிகளில் இந்த வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

தொலைபேசிகளைப் பயன்படுத்தி பேருந்துகளின்  கதவுகளை திறப்பதற்கான வசதிகளும் இதில் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

av-test-singapore.png