பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சகரிகா கட்ஜ். இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியை மையப்படுத்தி கடந்த 2007ஆம் ஆண்டு இந்தி மொழியில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான `சக் தே இந்தியா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உலகில் அறிமுகமானார் சகரிகா.
நடிகை சகரிகா கட்ஜ், பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. மேலும் பொது இடங்களிலும், பல நிகழ்ச்சிகளிலும் இரண்டு பேரும் ஒன்றாகவும் வலம் வந்தனர். ஜாகீர் கான் – சகரிகா கட்ஜ் இருவருக்கும் இடையே திருமண நிச்சதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதில் சில உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து வருகின்ற 27 ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தில் கிரிக்கெட் வீரர் நெஹாரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.