வேகமாக ஓடும் மிசலேஞ்சலோ எனும் இரட்டைத் தலை ஆமை!

இரட்டைத் தலை  ஆமை வேகமாக ஓடும் காணொளியானது,  சமூகவலைத்தளங்களில்  பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேகமாக ஓடும் மிசலேஞ்சலோ எனும் இரட்டைத் தலை ஆமை!

இந்த ஆமைக் குட்டி, ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தில் பிறந்தது. மூன்று மாத வயதான இந்த ஆமை ‘மிசலேஞ்சலோ’ (Michaelangelo) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

இது போன்ற இரட்டைத் தலை ஆமை  வகைகளை, சோம்ஜாய்  என்பவர் உருவாக்கி வருகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், ”என்னிடம் பல வகையான ஆமைகள் உள்ளன. ஆனால், முதல் முறையாக என்னிடம் ஒரு இரட்டைத் தலை ஆமை வந்துள்ளது. இவற்றைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் முதன் முறையாக கையாளுகிறேன். நான் இது போன்ற இரட்டைத் தலை ஆமைகளை உருவாக்குவது,  விற்பதற்காக மட்டுமே. மிசலேஞ்சலோ  மிகவும் ஸ்பெஷல். அனைவரும் ஆமைகள் என்றாலே மெதுவாகத் தான் செல்லும் என்று நினைப்பார்கள். ஆனால், இவன் எவ்வளவு வேகமாக செல்கிறான் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆமைக்கு ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில்,  இது செய்யும் குறும்புச் செயல்களை காணொளி எடுத்து, சோம்ஜாய் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.