தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களை சந்திக்க வேண்டும் என கோரி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிவைத்துள்ள கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி தலைநகர் டெல்லிவரை சென்று அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயகள் நடத்திய போரட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களது கோரிக்கை தொடர்பாக மத்திய அரசிடம் பேசி நல்ல முடிவு எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போரட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய விவசாயிகள் தமிழக முதலமைச்சர் சந்திக்க முயற்சித்ததாக கூறப்பட்டது.
இதனிடையே தமிழக முதலமைச்சர் சந்தித்த வேண்டும் என கோரி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே தமிழக விவசாயிகள் நடத்திய போரட்டத்தை தொடர்ந்து அவர்களை சந்திக்க தமிழக முதலமைச்சர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.