தினகரன் அணிக்கு அடுத்த ஷாக் தயார்..!!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-எடப்பாடி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், கட்சி கொடி, பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஷாக் கொடுக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏ செம்மலை பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்த்த ஒன்று. சின்னம் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியே.

உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பது நிரூபனமாகியுள்ளது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் முடிவு செய்வார்கள்.

ஜெயலலிதாவின் குரலாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை மற்றும் ஜெயா டிவியும் ஒலித்தது. அதனை கட்சிக்காக ஜெயலலிதா உருவாக்கினார்.

கட்சி சின்னத்தை மீட்டது போன்று இவற்றையும் மீட்டெடுக்க வேண்டும். அதனை கட்சித் தலைமை நிச்சயமாக செய்யும்.

ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையை உருவாக்க அனைவரும் பங்களிப்பு அளித்தோம். இது அனைவருக்கும் தெரியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக அலுவலகம் உள்ளது. அவை அனைத்தும் கட்சியினர், தொண்டர்களின் பங்களிப்பில் கட்டப்பட்டது. இருந்தாலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் பெயரில் உள்ளது.

இதனால், அது அவருக்கு சொந்தமானது என்று கூற முடியுமா? அது போலத்தான் ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையும். அதையும் மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.