இன்றைய ராசிபலன் (25/11/2017)

  • மேஷம்

    மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத் தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். புதிய எண்ணங்கள் தோன் றும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: இரவு 10.50 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். ஆடை, ஆபரணம் சேரும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். இரவு 10.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வீட்டை புதுப்பிப்பது பற்றி யோசிப்பீர்கள். வியாபா ரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர் கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • துலாம்

    துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். அதிகாரப் பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இனிமையான நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு அதிகரிக் கும். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைக் கொடுத்து உதவு வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

  • மகரம்

    மகரம்: இரவு 10.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: அநாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சொந்த-பந்தங் களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 10.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.