இன்றைய தினம் எகிப்து நாட்டின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் தனது கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
குறித்த கண்டனம் தொடர்பான அறிக்கையினை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு சகல ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதன்படி குறித்த பள்ளிவாசலில், தொழுகையில் ஈடுபட்ட அப்பாவி மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான செயலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தாருக்கு இலங்கை அரசாங்கமும் இலங்கைவாழ் மக்களும் ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எகிப்து நாட்டின் தேசிய துக்க தினத்தின்போது இலங்கையின் துயர் பகிவினை வெளிப்படுத்துவதோடு குறித்த பயங்கரவாதத் தாக்குதல் விடயத்தை சர்வதேச நாடுகள் உரிய வகையில் கையாளவேண்டும் என்று கோருவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.