பிரபல பாலிவுட் நடிகை சகாரியா காக்தே, பாலிவுட் படங்கள் மட்டும் இல்லாமல் மராத்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் சக்தே என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த வேக பந்து வீச்சாளர் ஜாகீர்கானை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் நிச்சியதார்தம் கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. பிறகு தற்போது இவர்களது திருமணம் முடிந்துள்ளது. நேற்று நடந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து மட்டுமே நடத்தியுள்ளனர். இந்த மாதம் 27 ஆம் தேதி மும்பையில் வரவேற்பு நடக்கவுள்ளது.