51 உயிர் காக்கும் முக்கிய மருந்துகளின் விலை குறைப்பு.!

51 உயிர் காக்கும் முக்கிய மருந்துகளின் விலை குறைப்பு.!

இந்தியா முழுவதும் உயிர் காக்கும் 51 முக்கியமான அத்யாவசிய மருந்துகளுக்கான விலை 6 சதவீதமில் இருந்து 53 சதவீதம் வரை குறைத்துள்ளது இந்திய அரசு.

இந்த தகவல் குறித்து என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காய்ச்சல், புற்றுநோய், இதயம் சம்மந்தப்பட்ட நோய் உள்பட 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

51 உயிர் காக்கும் முக்கிய மருந்துகளின் விலை குறைப்பு.!

இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். மேலும் அறிக்கையில், உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்தும், 15 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மாற்றி அமைத்தும் என்.பி.பி.ஏ., அறிவித்துள்ளது.