திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
தொல்லியல் பாதுகாப்பு இடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் திருகோணமலை காணப்படுகின்றது.
இங்கு கோணேஸ்வரம் கோவிலின் உச்சியில் பொதுமக்கள் சூழ்ந்துள்ள போது ஒரு இளைஞன் பாதுகாப்பு கம்பிகள் பொறுத்தப்பட்ட இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
திடீரென பாதுகாப்பு கம்பியின் மேல் ஏறி பள்ளம் உள்ள பகுதியைப் பார்த்து குதித்துள்ளான்.
இச்சம்பவம் அங்குள்ள ஒரு சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு நின்றிருந்தவர்கள் நினைத்திருந்தால் அந்த இளைஞனை காப்பாற்றியிருக்க முடியும், ஆனால் குறித்த இளைஞன் தற்கொலை செய்வதை அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.
அவரை காப்பாற்றும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.
ஒரு உயிர் போவதை மக்கள் வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் பொதுவாக வெளிநாடுகளில் தான் நடைபெறும். அவற்றை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.
ஆனால் தற்போது இலங்கையிலும் அவ்வாறான ஒரு துன்பகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
என்னதான் சுற்றுலாத்தலமாக காணப்பட்டாலும் திருகோணமலை இந்துக்களை பொருத்தமட்டில் சமயத்துடன் தொடர்புடையது. கடவுளின் சந்நிதியில் ஒருவர் தற்கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.