தாய் இறந்த சோகம் தாங்காது நெஞ்சுவலி ஏற்பட்டு ஒருமணி நேரத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியை சேர்ந்த பாலசிங்கம் தவமலர் (71 வயது) மற்றும் அவரது மகனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான பாலசிங்கம் பிரசன்னா (38 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுக் காலை குறித்த தாயாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகனான பாலசிங்கம் பிரசன்னா அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட மகன் அதிர்ச்சியடைந்ததுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.