ஆடுகள் பகை… குட்டிகள் உறவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியாவுக்கு சார்பாக, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவங்க்காவும் முன்னாள் ஜனாதிபதி பில் க்ளின்ட்டனின் மகள் செல்ஸி க்ளின்ட்டனும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மலியா ஒரு இளைஞனுடன் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் பரவியதையடுத்தே இவங்க்காவும் செல்ஸியும் மலியாவுக்குச் சார்பாகக் குரல் கொடுத்துள்ளனர். ஒபாமா – ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே!

இணையத்தில் நேற்று தரவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில், காற்பந்தாட்டப் போட்டியொன்றுக்கு முன்னதாக மலியா ஒபாமா, ஒரு இளைஞனை இறுக்கி அணைத்து முத்தமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, இவங்க்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில், “மாணவப் பருவத்தில் இருக்கும் மலியா தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. அவர் ஒரு சுதந்திரமான பெண். அவரது சுதந்திரம் பேணப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, “மலியா ஒபாமாவை ஒரு இளம் பெண்ணாக, ஒரு கல்லூரி மாணவியாக, ஒரு தனிப்பட்ட நபராகக் கருதவேண்டுமே தவிர, உங்கள் விளையாட்டு பொம்மையாகக் கருதக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் சட்டப்படி, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளின் தனிமை பாதிக்கப்படக்கூடாது. ஆனால், அந்த விதியை மீறும் வகையிலேயே இந்தக் காட்சி பதிவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே மலியா ஒபாமா சிகரட் புகைக்கும் வீடியோ ஒன்றும் அவர் வேடிக்கையாகத் தனது பின்னழகைக் காட்டும் வீடியோ ஒன்றும் பதிவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AP-Trump-Obama-Oval-jrl-161110_12x5_1600_11498