பழிவாங்க இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்ற பெண்!

தனது அயல் வீட்டுப் பெண்ணைப் பழிவாங்க நினைத்த மற்றொரு பெண், அவரது இரண்டு வயதான ஆண் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான பெண், டெல்லியின் உத்தம் நகரில் உள்ள தொடர்மனையின் இரண்டாவது மாடியில் வசித்து வருபவர். இவருக்கும் அதே தொடர்மனையில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் இடையில் சில நாட்களுக்கு முன் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

Captureryhrகொலை செய்யப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை, சந்தேக நபரின் குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம். கடந்த புதன்கிழமை சந்தேக நபர் அந்தக் குழந்தையை தன் வீட்டுக்கு வந்து விளையாடுமாறு கூறியுள்ளார்.

அதன்படி அங்கு சென்ற குழந்தையைப் பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்துக் கொலைசெய்தார்.

குழந்தையின் பெற்றோர் குழந்தையைத் தேடிச் சென்றபோது, காயமடைந்த நிலையில் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்தனர்.

உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்றபோதும் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.