மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் கடந்த யுத்தத்தின் போது இராணுவத்தால் அழிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட காலத்தின் பின் கடந்த வருடம் முதன் முதலாக பொதுமக்களால் மாவீரர் நினைவு நாள் அழிக்கப்பட்டிருந்த பகுதியில் நினைவு கூரப்பட்டது.இந்நிலையில் மாவீரர் இந்த வருடம் இம்மாதம் 27 ம் திகதி நடைபெற இருக்கும் மாவீரர் தின நாளை முன்னிட்டு சிரமதான பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில் மோட்டர் கிறைன்டர் மூலம் மேலதிக காடுகளை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ஒரு மாவீரனின் கல்லறை அழிக்கப்படாமல் சிறிய சிதைவுகளுடன் தென்பட்டமை சிரமதானப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.